Friday, May 10, 2024
No menu items!
Google search engine
Homeஆன்மிகம்மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் | Theppa Utsavam at Mannargudi Rajagopala...

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் | Theppa Utsavam at Mannargudi Rajagopala Swamy Temple


திருவாரூர்/மயிலாடுதுறை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனிப் பெருவிழா மார்ச் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கியநிகழ்வுகளான வெண்ணெய்த்தாழி உற்சவம் கடந்த 11-ம் தேதியும், தேரோட்டம் 12-ம் தேதியும் நடைபெற்றன. விடையாற்றி விழாவின்நிறைவாக நேற்று முன்தினம் இரவு ராஜகோபால சுவாமிகோயில் அருகே உள்ள கிருஷ்ணதீர்த்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இதில், சத்தியபாமா, ருக்மணி சமேதராக வேணுகோபாலர் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி, தெப்பத்தில் பவனி வந்தார். இந்நிகழ்ச்சியில், திரளானபக்தர்கள் கலந்துகொண்டு, ராஜகோபால சுவாமியை வழிபட்டனர்.

திருக்கடையூரில்…: இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிவீதியுலா, கடந்த 19-ம் தேதி காலசம்ஹார விழா, 21-ம் தேதிதேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், கோயில் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments