Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeவணிகம்அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நாளை நள்ளிரவு வரை நகைக் கடைகள் செயல்படும்: சிறப்பு சலுகைகள்...

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நாளை நள்ளிரவு வரை நகைக் கடைகள் செயல்படும்: சிறப்பு சலுகைகள் 3 நாட்கள் நீட்டிப்பு | Jewellery shops will be open till midnight tomorrow


சென்னை: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாளை நள்ளிரவு வரை நகைக் கடைகள் திறந்திருக்கும். மேலும், அட்சய திருதியை சலுகைகளை சில கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டித்துள்ளன.

அட்சய திருதியை நாளில் தங்கம்வாங்கினால், செல்வம் பெருகும்என்ற நம்பிக்கையும், ஐதீகமும்மக்களிடம் உள்ளது. இதற்கிடையே, இந்த ஆண்டு அட்சய திருதியை நாளை (மே 10) காலை 6.33 மணிக்குத் தொடங்கி மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது.

எனவே, வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, நகைக்கடைகள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி, தங்க நகைகள் பவுனுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியும், சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்க உள்ளன.

இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: இந்த ஆண்டு அட்சய திருதியைதினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகளை நகைக் கடைகள் அறிவித்துள்ளன.

நகைக் கடைகளில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எடை குறைவான நெக்லஸ், ஃபேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் ஆகியவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அட்சய திருதியை, வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை நீடிக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நகைக் கடைகள் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளன்று 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு விற்பனை கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,சில நகைக்கடைகள் அட்சய திருதியை சலுகையை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு நீட்டித்துள்ளன.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments