Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeவணிகம்சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிவு | Sensex fell 1,062 points

சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிவு | Sensex fell 1,062 points


மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிந்து 72,404-ல் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிப்டி 345 புள்ளிகள் சரிந்து 21,957-ல் நிலை பெற்றது.

சென்செக்ஸ், நிப்டி ஆகியவை 1.5 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் குறியீட்டெண் 2 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. இதனால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.6 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

இதுவரை முடிந்த 3 கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம்குறைந்தது, கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் நிறுவனங்களின் லாபம் எதிர்பார்த்த அளவில் இல்லாதது, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தைகள் சரிந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்றதும் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments