Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeசுற்றுலாகுன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை | Forest Department Bans...

குன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை | Forest Department Bans Tourists from visiting Coonoor Laas Falls


குன்னூர்: குன்னூரில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள், மலைப்பாதையில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் லாஸ் நீர்வீழ்ச்சி பகுதிகளில் சென்று, புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுப்பதால், தவறி ஆற்றில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு லாஸ் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும், அப்பகுதிக்கு செல்லமுடியாத வகையில் வனத்துறையினர் தடுப்பு ஏற்படுத்தினர். இதனை மீறி அருவிக்கு செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments