Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeசுற்றுலாஉதகை தாவரவியல் பூங்காவில் தொடங்கியது 126-வது மலர் கண்காட்சி | 126th Flower Show Kicks...

உதகை தாவரவியல் பூங்காவில் தொடங்கியது 126-வது மலர் கண்காட்சி | 126th Flower Show Kicks Off: Eye-Popping Lakhs of Flowers Decorate Disney World


Last Updated : 10 May, 2024 11:56 AM

Published : 10 May 2024 11:56 AM
Last Updated : 10 May 2024 11:56 AM

உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி தொடங்கியது. உதகை மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 35 அடி உயரம் 44 அடி அகலத்திலான டிஸ்னி வேர்ல்ட் முகப்பு பகுதி மற்றும் அந்த கதாபாத்திரத்தில் வரும் சிறுவர்கள் ஆகியவை ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வரும் உதகை மலை ரயில் குகையில் இருந்து வெளியில் வருவது போல 35 அடி நீளத்தில் 22 அடி அகலத்தில் 80 ஆயிரம் மலர்களை கொண்டு தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 126 வது மலர் கண்காட்சி மலர் பதாகை முப்பதாயிரம் கொய் மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 ஆயிரம் மலர்களைக் கொண்டு சிறு சிறு மலர் அலங்காரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மலர் அலங்கார மேடைகளில் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக 72 இனங்களில் 388 வகையான 35 ஆயிரம் மலர் தொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா காட்சியை தலைமை செயலர் சிவதாஸ் மீனா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!




RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments