Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeவிளையாட்டுDC vs RR | அவுட் கொடுத்த பிறகும் நடுவருடன் விவாதித்த சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!...

DC vs RR | அவுட் கொடுத்த பிறகும் நடுவருடன் விவாதித்த சஞ்சு சாம்சனுக்கு அபராதம்! | sanju samson fined for appeals umpire after given out


Last Updated : 08 May, 2024 11:03 AM

Published : 08 May 2024 11:03 AM
Last Updated : 08 May 2024 11:03 AM

நடுவருடன் விவாதிக்கும் சஞ்சு சாம்சன்

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 56-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் 20 ரன்களில் ஆட்டத்தை வென்றது டெல்லி கேபிடல்ஸ். ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட் ஆனது டெல்லியின் வெற்றிக்கு வித்திட்டது.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட் செய்தார். அவர் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸின் 16-வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை சிக்ஸர் அடிக்க முயன்றார் சஞ்சு சாம்சன். அதை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார்.

இருந்தும் அவரது பாதங்கள் பவுண்டரி லைனுக்கு அருகில் இருந்தது. அது பார்க்க கிட்டத்தட்ட எல்லை கோட்டினை தொட்டது போல இருந்தது. ஆனாலும் அது உறுதியாக தெரியவில்லை. டிவி அம்பயரின் பரிசீலனையில் அவுட் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடுவர்களுடன் அது குறித்து சஞ்சு சாம்சன் விவாதித்தார்.

டிஆர்எஸ் போகுமாறு சொன்னார். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என நடுவர்கள் தெரிவித்தவுடன் களத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெற்றிக்கான ரன்களை கடக்க முடியவில்லை.

இந்த சூழலில் அவுட் கொடுத்த பிறகும் நடுவருடன் விவாதித்த சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ. அதன்படி அவரது போட்டிக்கான கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சஞ்சு சாம்சன் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!




RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments