Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeஉலகம்ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல், வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை...

ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல், வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை | Indian Navy rescues Pakistan fisherman


புதுடெல்லி: ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாக். மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.

அல் ரஹ்மானி என்ற ஈரான் மீன் பிடி கப்பல் அரபிக் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது. அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 20 பேர் பணியாற்றினர். அதில் ஒருவர் எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்தார். தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட அந்த மீனவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீன்பிடி கப்பலில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது அரபிக் கடல் பகுதியில் இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் சுமேதா, கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. உடனே சுமேதா போர்க் கப்பலில் இருந்து மருத்துவக் குழுவினர், ஈரான் மீன் பிடி கப்பலுக்கு சென்று உயிருக்கு போராடிய பாகிஸ்தான் மீனவருக்கு சிசிச்சை அளித்தனர். அதன்பின் அவருக்கு நினைவு திரும்பியது.

அரபிக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர், கடற்கொள்ளை சம்பவங்களை தடுப்பது மட்டும் அல்லாமல், நடுக்கடலில் ஆபத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments