Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeஆன்மிகம்தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கோடை வெப்பத்தை தணிக்க பிரத்யேக ஏற்பாடு | Special Arrangement to...

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கோடை வெப்பத்தை தணிக்க பிரத்யேக ஏற்பாடு | Special Arrangement to Cool Summer Heat at Tiruvannamalai Annamalaiyar Temple


திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் சுட்டெரிக்கும் வெயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களின் வழி தடத்தில் தண்ணீரை ஊற்றி வெப்பம் தணிக்கப்பட்டது.

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாக திருவண்ணாமலை அண் ணாமலையார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்துக்கு அடுத்தபடியாக ஆந்திரா, தெலங் கானா மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். இதேபோல், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது கணிசமாக உள்ளது. வார விடுமுறை நாட்களில் இயல் பைவிட, பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும். அதன்படி, அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று பக்தர்களின் வருகை அதிகாலை முதல் இருந்தது.

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேற்கூரையுடன் கூடிய நகரும் தடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. கோயில் உள் பிரகாரங்களில் தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதன் மீது, வெப் பத்தை தணிக்க கோயில் ஊழியர்கள் மூலமாக தண்ணீர் ஊற்றப்பட்டது.

இதேபோல், வரிசையில் காத்திருந்த பக்தர் களின் பாதங்கள் மீது வெப்பத்தை தணிக்க தண்ணீர் ஊற்றப்பட்டது. பக்தர்களின் தாகத்தை தணிக்க, குடிநீர் வழங்கப்பட்டன. வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு எளிதாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வந்தவர்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனம் செய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments