Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeவிளையாட்டுபும்ரா முதல் சாவ்லா வரை... - மும்பையை பதறவைத்த ஜாக் மெக்கர்க் மீண்டும் 15 பந்துகளில்...

பும்ரா முதல் சாவ்லா வரை… – மும்பையை பதறவைத்த ஜாக் மெக்கர்க் மீண்டும் 15 பந்துகளில் அரைசதம் | Jake Fraser-McGurk equals own record with 15-ball half-century against Mumbai Indians


புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 அணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா சேஸிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க் – அபிஷேக் பொரேல் இணை ஓப்பனிங் செய்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்த ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க் இப்போட்டியிலும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் 2024 சீசனின் அதிவேக அரைசதம் என்ற தனது சாதனையை சமன் செய்தார்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அதிரடியுடன் தான் தொடங்கினார் ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க். லூக் வூட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய ஜாக், அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் என 19 ரன்கள் குவித்தார். இரண்டாவது ஓவர் வீசவந்த பும்ராவை சிக்சருடன் வெல்கம் செய்த ஜாக், அந்த ஓவரில் மேலும் இரண்டு பவுண்டரிகள் அடித்து மும்பையை பதற வைத்தார்.

இலங்கையின் நுவான் துஷாராவை நீண்ட காத்திருப்புக்கு பிறகு இன்று ஆடும் லெவனில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ். நுவான் துஷாராவுக்கு இன்றைக்கு சேர்ந்த நேரமோ தெரியவில்லை, அவரை அபிஷேக் பொரேல் பவுண்டரி அடித்து வரவேற்றார். அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை ஜாக்கிடம் கொடுக்க, அவரோ ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி, அரைசதம் அடித்தார்.

பின்னர், பியூஷ் சாவ்லா ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்து வெறித்தனம் கூட்டிய ஜாக், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பொளந்து கட்டினார். ஹர்திக் வீசிய 5வது ஓவரில் தலா 2 பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து, எந்த பவுலருக்கும் பாரபட்சம் காணிப்பிக்காமல் அதிரடியை கையாண்டார்.

அவரின் அதிரடியால் 2.4 ஓவர்களில் 50 ரன்களை கடந்த டெல்லி கேபிடல்ஸ், 6.4 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. இதன்பின்னும் அதிரடியை வெளிப்படுத்திய ஜாக், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 27 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் வெளியேறிய பிறகே மும்பை பவுலர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments