Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeகல்விவிஐடி சென்னை வழங்கும் `இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி' நிகழ்ச்சி: பிளஸ்-2...

விஐடி சென்னை வழங்கும் `இந்து தமிழ் திசை – உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்ச்சி: பிளஸ்-2 மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆன்லைன் தொடர் | uyarvukku uyarkalvi


சென்னை: விஐடி சென்னை வழங்கும் ‘இந்துதமிழ் திசை – உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆன்லைன் தொடர் நிகழ்வு நாளையும், நாளைமறுநாளும் (ஏப். 27, 28) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது

பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்துஎன்ன படிப்பது, எங்கே படிப்பது,எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்று பல கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழும்.அத்தகைய மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை – உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற ஆன்லைன் தொடர் நிகழ்வு 2நாட்கள் (சனி, ஞாயிறு) நடைபெறஉள்ளது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

வரும் சனிக்கிழமை ஆன்லைன்தொடர் நிகழ்வின் இரண்டாம் பகுதியில் ‘கலை மற்றும் அறிவியல்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக புள்ளியியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதத் துறையைச் சேர்ந்த டாக்டர் சி.விஜயலட்சுமி, சென்னை சாதிக் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் எம்.ஏ.சாதிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

வரும் ஞாயிறன்று நடைபெறும்ஆன்லைன் தொடர் நிகழ்வின் மூன்றாம் பகுதியில் ‘மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் அலைடு இன்ஜினீயரிங் ஸ்டிரீம்ஸ் துறையில் உள்ள வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், திருச்சி என்ஐடி புரொடக்‌ஷன் இன்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த டாக்டர், இன்ஜினீயர் எம்.துரைசெல்வம், திருவள்ளூர் கேட்டர்பில்லர் இந்தியா நிறுவன பொதுமேலாளர் (ஆபரேஷன்ஸ்) என்.அன்புசெழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்த இரு நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

இதில், பிளஸ் 2 முடித்த பிறகுபடிக்க வேண்டிய பல்வேறு படிப்புகள், அதற்கான நுழைவுத் தேர்வுகள், கல்விக் கட்டணம், உதவித்தொகை பெறும் வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்க… இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/UUK002 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடு மூலமாகப் பதிவு செய்துகொண்டு, பங்கேற்கலாம். முதலில் பதிவுசெய்யும் 10 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘கையருகே கிரீடம்’ என்ற நூல் பரிசாக வழங்கப்படும்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments