Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeவிளையாட்டுபாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டி: தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி | tamil nadu...

பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டி: தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி | tamil nadu nethra kumanan qualifies paris olympics sailing event


சென்னை: எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார். பாய்மர படகுப் போட்டியில் அவர் பங்கேற்கிறார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பாய்மர படகுப் பிரிவு போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது போட்டியாளராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதி வாய்ப்பில் அவர் பங்கேற்று இந்த வாய்ப்பை உறுதி செய்துள்ளார். இதில் பாய்மரப் படகுப் போட்டியில் வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். 67 புள்ளிகள் பெற்று டாப் 5-ல் ஒருவராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ILCA 6 பிரிவில் அவர் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments