Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeமாநிலம்பதவிக்காலம் முடிந்தும் துணைவேந்தர் பங்களாவை காலி செய்யாத குர்மீத் சிங்: போராட்டம் நடத்த மத்திய பல்கலை....

பதவிக்காலம் முடிந்தும் துணைவேந்தர் பங்களாவை காலி செய்யாத குர்மீத் சிங்: போராட்டம் நடத்த மத்திய பல்கலை. சங்கங்கள் முடிவு | Gurmeet Singh who did not vacate the Vice-Chancellor bungalow after the end of his tenure


புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் குர்மீத் சிங், 2017-ம் ஆண்டு நவ. 29-ம் தேதி பொறுப்பேற்றார். 2022-ம்ஆண்டு நவ.23-ம் தேதி இவரது பதவிக்காலம் நிறைவடைந்தது.

புதிய துணைவேந்தரை நியமிக்க புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் செயற்குழுவில் உள்ள இருவரின் பெயர்களை பரிந்துரைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியது. இச்சூழலில் குர்மீத்சிங்கின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.

இக்காலத்தில் மத்தியப் பல்கலைக்கழகத்தின் தரவரிசை கடுமையாக சரிந்தது. மேலும் பலவிதகுற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குகளும் தொடரப் பட்டன.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் புதிய கல்விக்கொள்கையை பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சூழலில் பேராசிரியர் குர்மீத் சிங்கின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் 2023 நவ.23-ம்தேதி முடிவடைந்தது. அவருக்கு, மத்திய அரசு பதவி நீட்டிப்பை அளிக்கவில்லை.

பேராசிரியர் குர்மீத் சிங் தனது பதவியில் இருந்து விலகியவுடன், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் கே. தரணிக்கரசுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போது பொறுப்பு துணைவேந்தராக தரணிக்கரசு செயல்பட்டு வருகிறார்.

பதவிக்காலம் முடிந்து இரண்டு மாதங்களாகியும் முன்னாள் துணைவேந்தர் குர்மீத் சிங் அவர் தங்கியிருந்த புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பங்களாவை காலி செய்யாமல் தொடர்ந்துதங்கியுள்ளதற்கு பல்கலைக்கழக சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பங்களா முன்பு போராட்டம் நடத்தவும் முடிவு எடுத்துள்ளன.

புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (puta), பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத பணியாளர் நலச்சங்கம் (puntswa) மற்றும்புதுச்சேரி பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச்சங்கம் (pusc/ stewa) ஆகியவை தரப்பில் இருந்து தற்போதைய துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பல்கலைக்கழகத்தின் அசையும், அசையாத சொத்துகளை தற்போதைய துணைவேந்தர் கையில் எடுத்து, பல்கலைக்கழக வளங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பதவிக்காலம் முடிந்த துணைவேந்தர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

துணைவேந்தர் பங்களா என்பது பணியாளர் களைக் கொண்ட முழு வசதியுடன் கூடிய தங்குமிடம்.பல்கலைக்கழக துணைவேந்தர் பங்களாவில் பணிபுரியும் பணியாளர்கள், சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளுக்கான நிதி, மின்கட்டணம் ஆகியவை பல்கலைக்கழக கருவூலத்தில் இருந்து செலுத் தப்படுகிறது.

ஏற்கெனவே, இதற்கு முன் டெல்லி பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய குர்மீத் சிங், அங்கு இதுபோல தங்கியிருந்த வகையில் ரூ. 23 லட்சம் வரை அந்தப் பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் இங்கு பங்களாவை காலி செய்யாமல் இரண்டு மாதங்களாக தங்கியுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் வாகனங்களையும், ஓட்டுநர்களையும் போக்குவரத்து பிரிவினர் அவருக்கு தொடர்ந்து வழங்கியதற்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், ‘அவுட்சோர்ஸ்’ மூலம் ஓட்டுநர்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பதவிக்காலம் முடிந்தும் துணைவேந்தர் பங்களாவில் தங்கியிருப்பது மிக உயர்ந்த பதவியை வகித்த ஒருவர் செய்யும் தகுதியற்ற செயல். தற்போதைய நிர்வாகமும் அதற்கு எதிராக செயல்படாமல் உள்ளது.

அவர் காலி செய்யாவிட்டால், அந்த பங்களா முன்பு போராட்டம் நடத்துவோம். இதைக் குறிப்பிட்டு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் தந்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments