Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeமாநிலம்செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.31 வரை நீட்டிப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.31 வரை நீட்டிப்பு – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு | Court custody of Senthil Balaji extended till Jan 31


சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.31ம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜன.29ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments