சென்னை: ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இலங்கையில் இருந்து தமிழகம் வரும் குடும்பம், இங்குள்ள வாழ்க்கைக்கு எப்படி தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே கதை. முழுக்க காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
இதன் டீசர் வரவேற்புக்கு பிறகு, தமிழக உரிமையைக் கைப்பற்ற ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், முதலில் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு படத்தை தயார் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்குப் பிறகு படத்தை காட்டி வியாபாரம் பேசலாம் என திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தினை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக ‘குட் நைட்’, ‘லவ்வர்’ ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.