சென்னை: இந்தியாவில் விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்த போனுடன் விவோ எக்ஸ்200 புரோ மாடல் போனும் அறிமுகமாகி உள்ளது.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது விவோ எக்ஸ்200 சீரிஸ் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்100 போனை விவோ அறிமுகம் செய்திருந்தது. அதன் மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிப்பாக எக்ஸ்200 வெளிவந்துள்ளது. இது விவோவின் ஃப்ளக்-ஷிப் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்200: சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- மீடியாடெக் டிமான்சிட்டி 9400 ப்ராசஸர்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- 12ஜிபி/16ஜிபி ரேம்
- 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ்
- 5,800mAh பேட்டரி
- 90 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- இந்த போனின் விலை ரூ.65,999 முதல் ஆரம்பமாகிறது
- வரும் 19-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது
- சிங்கிள் வேரியண்ட் மாடலாக வெளிவந்துள்ள எக்ஸ்200 புரோ மடலில் விலை ரூ.94,999