மும்பை: மும்பை கிழக்கு போரிவெலி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த நவம்பர் 8-ம் தேதி வாட்ஸ்-அப் அழைப்பு வந்துள்ளது. அதில் போலீஸ் உடையில் இருந்த ஒருவர், தன்னை மும்பை காவல் துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் ஆதார் என்ணை கேட்டுப் பெற்றுள்ளார். பிறகு ரூ.2 கோடி முறைகேடு வழக்கில் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து அப்பெண்ணின் வங்கிக் கணக்கு விவரத்தை தருமாறு அந்த நபர் கேட்டுள்ளார். இதையடுத்து இது மோசடி முயற்சி என்பதை உணர்ந்து கொண்ட அப்பெண், மும்பை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் வந்து அனைத்து விவரத்தையும் அளிப்பதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இது தொடர்பாக அப்பெண் கடந்த சனிக்கிழமை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.