அனைத்து பிரச்சினைகளும் முடிவுற்று, ஓடிடியில் வெளியாகியுள்ளது ‘தங்கலான்’ திரைப்படம்.
ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான படம் ‘தங்கலான்’. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இதன் ஓடிடி வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதற்கு காரணமாக சரியான தருணத்தில் ஓடிடி நிறுவனத்துக்கு படத்தைக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.
தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்டு ‘தங்கலான்’ திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று வெளியிட்டுள்ளார்கள். இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.