நடிகை சம்யுக்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
2018-ல் மலையாளத்தில் வெளியான ‘தீ வண்டி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சம்யுக்தா.
அதே ஆண்டு வெளியான ‘களறி’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக களம் கண்டார்.
‘கல்கி’, ‘எடக்காடு பெட்டாலியன்’, ‘அன்டர் வொல்டு’, ‘வெல்லம்’ ஆகிய மலையாள படங்களின் மூலம் கவனம் பெற்றார்.
2022-ல் வெளியான ‘பீம்லா நாயக்’ தெலுங்கில் அவருக்கு அறிமுகம் கொடுத்தது.
தமிழில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘சார்’ படத்தில் நடித்தார்.
சம்யுக்தா நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘விருபாக்ஷா’ படம் பேசப்பட்டது.
அடுத்து மோகன்லாலின் ‘ராம்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சம்யுக்தாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.