கெபர்கா: தென் ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபர்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86.3 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கெல்டன் 101, எய்டன் மார்க்ரம் 20, டோனி டி ஸோர்ஸி 0, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4, கேப்டன் தெம்பா பவுமா 78, டேவிட் பெலிங்காம் 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
கைல் வெரெய்ன் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 103.4 ஓவர்களில் 358 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தனது 3-வது சதத்தை விளாசிய கைல் வெரெய்ன் 133 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேசவ் மகாராஜ் 0, காகிசோ ரபாடா 23, டேன் பாட்டர்சன் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி தரப்பில் லகிரு குமரா 4, அஷிதா பெர்னாண்டோ 3, விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய இலங்கை அணி // ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் // விக்கெட்கள் இழப்புக்கு // ரன்கள் எடுத்திருந்தது.