புதுடெல்லி: உலகளவில் மக்களை அதிகம் கவர்ந்த டாப் 100 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் ஒரே ஒரு நகரம் மட்டுமே இடம்பிடித்துள்ளது. அதன் விவரங்களை காணலாம்.
ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) என்னும் தர ஆய்வுகள் நடத்தும் நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரம், தொழில் துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை மதிப்பிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தொடர்ந்து 4-வது ஆண்டாக பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. மேட்ரிட் 2-வது இடத்திலும், டோக்கியோ 3-வது இடத்திலும், ரோம் 4-வது இடத்திலும், மிலன் 5-வது இடத்திலும் உள்ளன. நியூயார்க், ஆம்ஸ்டர்டேம், சிட்னி, சிங்கப்பூர், பார்சிலோனா ஆகிய நகரங்கள் டாப் 10-ல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் ஒரே ஒரு நகரம் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி 74-வது இடத்தில் உள்ளது. ஜெருசலேம் 98-வது இடத்திலும், ஜுஹாய் 99-வது இடத்திலும், கெய்ரோ 100-வது இடத்திலும் இடத்திலும் உள்ளன. ஒலிம்பிக் விளையாட்டு மற்றும் சுற்றுலாவுக்கு வழங்கப்படும் அதிக சலுகைகள் காரணமாக, பாரிஸுக்கு இந்த ஆண்டில் மட்டும்.79.3 கோடி பேர் வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.