சென்னை: மறைந்த நடிகை சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிறது. இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
க்ளிம்ஸ் வீடியோ எப்படி? – தொடக்கத்தில் இந்திரா காந்தி போல ஒருவர் காட்டப்படுகிறார். அவர் அன்றைய செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்துகொண்டிருக்கும்போது எல்லா இடத்திலும் சில்க் ஸ்மிதாவின் புகைப்படங்களே நிரம்பியிருக்கின்றன. யார் இந்த சில்க்? என்று கேட்க, அடுத்து சில்க் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்திரிகா ரவி நடந்து வர சுற்றியிருக்கும் அனைவரும் மெய் மறந்து அவரை பார்க்கின்றனர்.