நடிகர் நெப்போலியனை, ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர், திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசன். ஜி.வி.பிரகாஷ் குமாரையும் தனது படம் மூலம் ஹாலிவுட்டுக்கு அழைத்துச் செல்லும் இவர், இப்போது, யோகி பாபுவை அங்கு அறிமுகப்படுத்துகிறார்.
தனது கைபா பிலிம்ஸ் சார்பில் டெல் கே.கணேசன் அடுத்து தயாரித்து இயக்கும் படம், ‘டிராப் சிட்டி’. இதில், பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ஜென்கின்ஸ், நெப்போலியன், ஜி.வி. பிரகாஷ் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். சவாலான இசைத் துறையில் ஓர் இளம் கலைஞனின் போராட்டத்தைச் சொல்லும் படம் இது. அழுத்தமான கதைச் சொல்லல் மற்றும் சிறந்த நடிகர்களின் பங்களிப்போடு உருவாகும் இந்தப் படத்தில், யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல அவர் ஆடும் தனித்துவமான காட்சி இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.