சென்னை: ‘ட்ராப் சிட்டி’ (Trap city) படத்தின் மூலம் நடிகர் யோகிபாபுவும், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். திருச்சியைச் சேர்ந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான டெல்.கே.கணேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘Devil’s Night: Dawn of the Nain Rouge’ படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார். இதில் நெப்போலியன் அருங்காட்சியக காப்பாளராக நடித்திருந்தார். இந்நிலையில் டெல்.கே.கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ட்ராப் சிட்டி’.
இந்தப் படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ஜென்கின்ஸ், நெப்போலியன், ஜி.வி. பிரகாஷ் குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் மூலம் யோகிபாபுவும், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இசைத் துறையில் தடம் பதிக்க போராடும் இசைக்கலைஞனின் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை தனது கைபா பிலிம்ஸ் பேனரில் டெல்.கே.கணேஷ் தயாரித்துள்ளார். படம் டிசம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்ரெய்லரில் மார்டன் காஸ்டியூமில் கவனம் பெறுகிறார் யோகிபாபு. மருத்துவராக வந்து செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். ட்ராப் சிட்டி ட்ரெய்லர்: