பார்டர் – கவாஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டம் முடியும் முன்பாகவே 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய வீரர்களைச் சாய்த்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான வேகங்கள் சரியான பதிலடியைத் தந்தன.
முதல் நாளிலேயே இரண்டு அணிகளையும் சேர்த்து 17 விக்கெட்டுகள் காலியாயின. வழக்கமாக இந்தியாவில் டெஸ்ட் மேட்ச் நடக்கும்போது ஒரே நாளில் இப்படி விக்கெட்டுகள் சரிவதுண்டு. உடனே, இந்திய மைதான பிட்ச்சுகளை ”குழி பிட்ச்” என்று வெளிநாட்டினர் கிண்டலடிப்பார்கள்.
இப்போது பெர்த்தில் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் பிட்ச்சில் 17 விக்கெட்டுகள் காலியானாதால், ஆஸ்திரேலியா மைதான பிட்ச் குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டலடிக்கத் தொடங்கியுள்ளனர். சோஷியல் மீடியாவில் இது குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களைக் கலாயத்து வருகின்றனர். இதுக்கு பேருதான், உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்பதோ!