மும்பை: இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இன்று (நவ.21) காலை சரிவுடன் தொடங்கியது. அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா வைத்துள்ள குற்றச்சாட்டு இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 77,711 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. சுமார் 550 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவை கண்டது. காலை 11 மணி நிலவரப்படி 77,046 புள்ளிகளுடன் சென்செக்ஸ் வர்த்தகம் உள்ளது. இதே போல 23,488 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி 50, சுமார் 213 புள்ளிகள் வரை சரிந்தது. காலை 11 மணி நிலவரப்படி 23,335 புள்ளிகளுடன் நிஃப்டி 50 வர்த்தகம் உள்ளது.
ரூ.2 லட்சம் கோடியை இழந்த அதானி குழுமம்: வியாழக்கிழமை காலை, 20 சதவீத சரிவை அதானி குழும பங்குகள் எதிர்கொண்டன. அமெரிக்கா, அந்நிறுவனத்தின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டே இதற்கு காரணம். இந்நிலையில், அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் ரூ.2 லட்சம் கோடி சரிந்தது. மூலதன சந்தை தரவுகளின்படி தற்போது அதானி குழுமத்தின் 11 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.12.3 லட்சம் கோடியாக உள்ளது.