காஞ்சிபுரம்: சாம்சங் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மூலம் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு: எங்கள் சென்னை தொழிற் சாலையில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக, நிறுவனத்தின் அலுவலர்கள் மீது குற்றம்சாட்டி ஒரு பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உன்னிப்பாக கவனித்து, முழுமையாக விசாரித்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் தொழிலாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எங்கள் நிறுவனம் எந்த குழுவிலும் சேர ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மேலும் எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முரணாக கூறப்படும் கூற்றுகள் முற்றிலும் தவறானவை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.