புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி, இன்று (சனிக்கிழமை) டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகரான டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பின் கீழ் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
97 வயதாகும் அத்வானி, சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.