சென்னை: தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் கணித்த ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ நூல் மலேசிய நாட்டில் வெளியிடப்பட்டது.
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவைகளைக் கொண்டு 27 நட்சத்திரங் களுக்கு பலன் சொல்வது பஞ்சபட்சி சாஸ்திரம். இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காகபுஜண்டர் அருளிய ஜோதிட உயிர்நிலை சாஸ்திரமாகும்.
மகாகுரு சிவவாக்கிய தம்பிரான் சுவாமிகளின் சீடரான தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள், ஜோதிடம், பஞ்சபட்சி சாஸ்திரம், பிரம்ம ரகசியம் உள்ளிட்ட அரிய கலைகளில் தேர்ச்சி பெற்று, பலருக்கும் வழிகாட்டியாக உள்ளார். தனது பஞ்சபட்சி பலன்கள் மூலம் இதுவரை 10,000-க்கும் மேற்பட்டதிருமணங்களை நடத்தி வைத்துள்ளார். பண்டைய நாட்களில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தை சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் ‘தி இந்து’ நாளிதழின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் ‘பஞ்ச பட்சி பஞ்சாங்கம் – ரிஷபானந்தரின் பொக்கிஷம்’ என்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
2025 ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டுக்கான பலன்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. இந்த நூல் மலேசிய நாட்டின் ஜொகூர் பாரு (Johor Bahru) நகரில் அண்மையில் வெளியிடப்பட்டது. திருப்புகழையும், திருவாசகத்தையும் முற்றும் கற்றவரும், மிகச் சிறந்த தமிழறிஞரும், சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளரும், சௌராஷ்டிரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற வணிகவியல் துறை பேராசிரியருமான சொ.சொ.மீனாட்சி சுந்தரம் நூலை வெளியிட்டார். நூலாசிரியர் தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் உடன் இருந்தார்.
இந்நூலைப் பற்றிய கூடுதல் விவரங்களை இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். இந்த நூலின் விலை ரூ.90. வரும் 15-ம் தேதி வரை 20 சதவீத சிறப்பு சலுகையில் இந்நூல் கிடைக்கும். இந்தியாவுக்குள் புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற ஒரு புத்தகத்துக்கு அஞ்சல் செலவு ரூ.30-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15-ம் சேர்த்து, KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D, Money order அல்லது Cheque அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-2. போன்: 044-35048001. பணம் அனுப்பியவரின் முகவரி மற்றும் கைபேசி எண்ணை அவசியம் குறிப்பிட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 7401296562 / 7401329402 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications