புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
2021-ல் 29 இந்தியர்களும், 2022-ல் 57 இந்தியர்களும் வெளிநாடுகளில் தாக்கப்பட்டனர். 2023-ல் மட்டும் மொத்தம் 86 இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டனர். இதில் பலர் உயிரிழந்தும் உள்ளனர். அதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 12 பேர் மீதும், கனடா, பிரிட்டன், சவுதி அரேபியாவில் தலா 10 பேர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.