சென்னை: சென்னையில் இரண்டு நாட்களில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1240 உயர்ந்து நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய விலை நிலவரம்: சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,285-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையாகிறது.
2 நாட்களில் ரூ.1240 உயர்வு.. உலக அளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழலைப் பொறுத்து இந்தியாவின் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது உச்சத்தை தொட்டிருந்த தங்கம் விலை அதன் பின்னர் சற்றே குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வு கண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இரண்டு நாட்களில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1240 உயர்ந்து நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச போர்ப் பதற்றங்களால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக நகை வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.