சென்னை: சென்னை இலக்கிய மற்றும் கலைத் திருவிழா 3.0 கோட்டூர்புரத்தில் உள்ள டிசம்பர் 14-ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை சர்வதேச மையம் மற்றும் வேழி ஆப் வேர்ட்ஸ் ஆகியவை சார்பில் சென்னை இலக்கிய மற்றும் கலைத் திருவிழா 2022-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகிறது.
தொடர்ந்து 3-வது ஆண்டாக சென்னை இலக்கிய மற்றும் கலைத் திருவிழா 3.0 கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பொருளியியல் கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 14-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த முறை சிஷ்யா பள்ளியும் இந்நிகழ்வை இணைந்து வழங்குகிறது. நிகழ்ச்சியானது மொத்தம் 8 அமர்வுகளாக காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை நடத்தப்பட உள்ளது.
இதில் எழுத்தாளர்கள் வில்லியம் டல்ரிம்பள், பி.சாய்நாத், நாட்டியக் கலைஞர் அனிதா ரத்தினம், நாடகக் கலைஞர் பி.சி.ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு துறைசார்ந்த அறிஞர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். இதுதவிர நிபுணர்களுடனான கலந்துரையாடல், குழு விவாதம் உட்பட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் கலந்துகொள்ள பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசமாகும். இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டமாக செயல்பாடுகள் டிசம்பர் 13-ம் தேதி காலை 8.30 முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்பட உள்ளன. இதில் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள சபரி என்பவரை 9884966613 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.