கெபர்கா: தென் ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபர்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 358 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 101, கைல் வெரெய்ன் 105 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து விளையாடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. பதும் நிஷங்கா 89, திமுத் கருணரத்னே 20, தினேஷ் சந்திமால் 44 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 40, கமிந்து மெண்டிஸ் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 99.2 ஓவர்களில் 328 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 44, கமிந்து மெண்டிஸ் 48, தனஞ்ஜெயா டி சில்வா 14, குஷால் மெண்டிஸ் 16, லகிரு குமரா 0, விஷ்வா பெர்னாண்டோ 2, பிரபாத் ஜெயசூர்யா 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் டேன் பாட்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். கேசவ் மகாராஜ், மார்கோ யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
30 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி // ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் // விக்கெட்கள் இழப்புக்கு // ரன்கள் எடுத்திருந்தது.