Last Updated : 07 Dec, 2024 04:05 PM
Published : 07 Dec 2024 04:05 PM
Last Updated : 07 Dec 2024 04:05 PM
சென்னை: ‘கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு மீண்டும் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சூர்யா.
சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் அப்படத்தை தயாரித்த ஞானவேல்ராஜாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தோல்வி அடைந்த படங்களில், இதன் நஷ்டம் பெரியது என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனை சரிசெய்யும் விதமாக, மீண்டும் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டுள்ளார். இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்காக சரியான கதை ஒன்றை தேர்வு செய்யும் நோக்கில் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார்.
முன்னதாக, ஞானவேல்ராஜா கஷ்டத்தில் இருக்கிறார் என்ற காரணத்தினால் தான் தேதிகள் கொடுத்தார். அந்த தேதியில் உருவான படம் தான் ‘கங்குவா’. அதுவும் தோல்வியடைந்ததால் தான் மீண்டும் தேதிகள் கொடுத்துள்ளார் சூர்யா என்பது நினைவுக் கூரத்தக்கது. தற்போது நடித்து வரும் படங்கள் முடித்தவுடன் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!