சென்னை: இந்தியன் 2’ படத்தில் நடித்தற்காக என் நடிப்பை என் வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
‘மிஸ் யூ’ திரைப்படம் வேறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும். இந்த படத்தில் என்னோடு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு காதல், நட்பு, குடும்பம் என ஒரு படம் அமைந்திருக்கிறது. ஒரு நல்ல படத்துக்கு நல்ல படம் என்கிற அடையாளத்தை ஆடியன்ஸ் தான் கொடுக்க வேண்டும்.
ஒரு படம் வெளியாகிவிட்டால் அது எல்லாருக்கும் சொந்தமாகி விடும். டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் யார் வேண்டுமானாலும் அது குறித்து கருத்து சொல்லலாம். இதை நான் முன்பே பலமுறை கூறியிருக்கிறேன்.
‘இந்தியன் 2’ படத்தில் நடித்தற்காக என் நடிப்பை என் வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள். நான் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறேன். சென்னையில்தான் என் வீடு இருக்கிறது. இங்குதான் நான் வரி கட்டுகிறேன். வருடத்துக்கு இரண்டு படங்கள் கொடுக்கிறேன். அடுத்த வருடம் மூன்று படங்கள் வரும்” இவ்வாறு சித்தார்த் தெரிவித்தார்.
‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் அடுத்து இயக்கியுள்ள படம், ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ளார். ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இப்படம் வரும் டிச.13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.