மொராதாபாத்: உ.பி.யின் மொராபாத்தில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட டிடிஐ சிட்டி சொசைட்டி உள்ளது. இங்கு வசிக்கும் ஒருவர் தனது வீட்டை முஸ்லிம் டாக்டருக்கு விற்றதை எதிர்த்து மற்ற குடியிருப்புவாசிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து டிடிஐ சிட்டி சொசைட்டி தலைவர் அமித் வர்மா கூறுகையில், “இது ஒரு இந்து சொசைட்டி. இங்கு 400-க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் வசிக்கின்றன. மற்ற சமூகங்களை சேர்ந்த யாரும் இங்கு வசிப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.
குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், “பிற சமூகங்கள் இங்கு குடியேறினால் இந்துக்கள் வெளியேறத் தொடங்கி, தேவையற்ற மாற்றங்கள் ஏற்படலாம், காலனியின் தன்மை மாறலாம்” என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றார்.
மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் சிங் கூறுகையில், “சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி சுமூக தீர்வுக்கு முயன்று வருகிறோம்” என்றார்.