சென்னை: தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் ஆதரவோடு, எஸ்ஐவியுஎஸ் இந்தியா மற்றும் எஸ்ஐவியுஎஸ் தமிழ்நாடு ஆகிய இணைந்து 2024-ம் ஆண்டிற்கான எஸ்ஐவியுஎஸ் இந்தியா தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ள நீச்சல் மையத்தில் நடத்தி வருகின்றன. 3 நாட்கள் கொண்ட இந்த போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம் மற்றும் டவுன் சிண்ட்ரோம் உடையோருக்கான இந்த போட்டியில் தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களைச் சேர்ந்த சிறப்பு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சைரஸ் இந்தியா தலைவர் டாக்டர் பால்தேவசகாயம் மற்றும் பாரா அசோசியேஷன் தமிழ்நாடு நிர்வாகி கிருபாகர ராஜா ஆகியோர் செய்துள்ளனர்.