திருச்சி: அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
தொடர்ந்து, அன்பில் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு, அன்பில் அறக்கட்டளை சார்பாக பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “இந்தியாவிலேயே நாட்டு நலப்பணித் திட்டத்தை (என்எஸ்எஸ்) சிறப்பாகச் செயல்படுத்தும்மாநிலம் தமிழகம்தான். பள்ளிமாணவ, மாணவிகள் தங்களதுதனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல, தங்கள் நண்பர்கள் கேட்கும் பாடங்கள் சம்பந்தமான சந்தேகங்களை விளக்கி, அவர்களையும் தேர்வில் வெற்றிபெறச் செய்ய உதவ வேண்டும்” என்றார்.