தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைத்தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாளர்கள் இணைந்து, தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் என்னும் புதிய சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சங்கத்தின் கவுரவத் தலைவர்களான சத்யஜோதி தியாகராஜன், ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சின்னத்திரை தயாரிப்பாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அதைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப் பட்டன. இந்த சங்கத்தின் தலைவராக உதயசங்கர், பொதுச்செயலாளராக ராஜவேலு, பொருளாளராக ஏ.குருபரன், துணைத் தலைவர்களாக கவிதா பாரதி, கே. திருஞானம், இணைச் செயலாளர்களாக எஸ்.சாய் கணேஷ்பாபு, ஆர்.ஹேமச்சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.