வர்ஜீனியா: அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டஅந்நிறுவனம், 10 சதவீத ஊழியர்களை வேலைநீக்கம் செய்யப்போவதாக கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில், தற்போது வேலை நீக்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதன்படி அந்நிறுவனத்தின் 17 ஆயிரம் ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
நிதி நெருக்கடி காரணமாக போயிங் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளை ஒத்திவைத்துள்ளது. 777X ஜெட்விமானத்தை 2025-ம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. தற்போது அது 2026-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் போயிங் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் பங்கு மதிப்பும் சரிவைக் கண்டது.