சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நேற்று (நவ.14) திரையரங்குகளில் வெளியானது. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.22 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக உலக அளவில் ரூ.40 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிகபட்சமாக விஜய்யின் ‘தி கோட்’ ரூ.126 கோடியை வசூலித்தது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ ரூ.60 கோடியையும், சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ ரூ.42 கோடியையும் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து விடுமுறை நாட்களாக இருந்தாலும், ‘கங்குவா’ வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.