அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது.
திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு ஆன்லைன் டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு வெளியானது.
நாளை 23-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண சேவைக்கும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை சேவைக்கும், பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்குமான ஆன்லைன் டிக்கெட்டுகளும் வெளியாக உள்ளன.
25-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியாகிறது. பிற்பகல் 3 மணிக்கு தேவஸ்தான விடுதிகளில் தங்குவதற்கான முன்பதிவு தொடங்குகிறது. பக்தர்கள் ttdevasthanams.ap.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்துமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏழுமலையானை ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி தரிசிக்கும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் ரேணிகுண்டா விமான நிலையத்தில் வழங்கப்படுகிறது. இதன் எண்ணிக்கையை தேவஸ்தானம் இன்று (நவ.22) முதல் 100-ல் இருந்து 200 ஆக உயர்த்தியுள்ளது. .திருமலையில் கோகுலம் விடுதியின் பின்புறம் தினமும் நேரடியாக வழங்கப்படும் ஸ்ரீவாணி டிக்கெட் எண்ணிக்கையை 900-ல் இருந்து 800 ஆக குறைத்துள்ளது.