அடிலெய்டு: “ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை விட சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். எங்களுக்கு அதற்கான வாய்ப்பு இருந்தும் அதை தவற விட்டோம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை தான் இந்த தோல்வி” என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளும் தலா 1-1 வெற்றி என்ற சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தோல்வி குறித்து மனம் திறந்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, “இந்த வாரம் எங்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. போட்டியில் வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை.
ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை விட சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். எங்களுக்கு அதற்கான வாய்ப்பு இருந்தும் அதை தவற விட்டோம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை தான் இந்த தோல்வி. பெர்த் டெஸ்ட்டில் செயல்பட்டதை போல, அடிலெய்டிலும் சிறப்பாக செயல்பட விரும்பினோம். ஆனால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் அதற்கே உண்டான தனி சவால்கள் இருக்கின்றன.
பகலிரவு ஆட்டம் சவால் நிறைந்தது என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும் நான் முன்பே சொன்னது போல ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை விட சிறப்பாக பேட்டிங் செய்தனர். எனவே நாங்கள் அடுத்த போட்டியை நோக்கி கவனம் செலுத்த இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.