Thursday, June 13, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


பொதுப்பலன்: பழைய வீட்டை புதுப்பிக்க, நீர்நிலைகளை சுத்தப்படுத்த, ஆழப்படுத்த, கடன் பைசல் செய்ய, வழக்குகள் பேசி தீர்க்க, வாகனம் விற்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று. சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வாகனத்துக்கு அடிக்கடி செலவு செய்த நிலை மாறும். புதிய வாகனம் வாங்குவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

ரிஷபம்: புதிதாக வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் ஓய்ந்து, மகிழ்ச்சி, மனநிம்மதி கிடைக்கும். வெகுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வந்து ஆச்சரியப்படுத்துவார்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். தக்க சமயத்தில் உதவுவார்கள். தொழில், வியாபாரத்தில் நீண்ட காலமாக வராமல் இருந்த பாக்கிகள் வசூலாகும்.

கடகம்: சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் இருந்த பழுது நீங்கும். வீடு, கடையை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அரசு உதவிகள், வங்கி கடன் கிடைக்கும்.

சிம்மம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புதிய பதவி தேடி வரும். பேச்சில் பொறுமை தேவை.

கன்னி: நெருங்கிய சொந்த பந்தங்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபத்துக்கு இடம்தராமல் அனுசரித்து செல்லுங்கள். திடீர் பயணம், அலைச்சல், அசதி ஏற்படும். அலுவலத்தில் வேலை சுமை கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்: எதிர்பாராத பண வரவால் பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வேலை சுமை குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டு.

விருச்சிகம்: கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் சேரும். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை அமையும். தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்கள், பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதம் குறையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். தடைகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

மகரம்: வருங்கால வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு, வங்கி வகையில் எதிர்பார்த்த வேலைகள் முடியும். ஆன்மிக நாட்டம் கூடும்.

கும்பம்: வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால், ஆதாயம் உண்டு. வங்கியில் கேட்ட கடன் உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவதால் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் உற்சாகம் தரும்.

மீனம்: எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். யோசித்து செயல்படுவது அவசியம். வீண், ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும், திறமையாக சமாளிப்பீர்கள். வேலை சுமை அதிகரிக்கும். பயணத்தில் கவனம் தேவை.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments