Monday, June 17, 2024
No menu items!
Google search engine
Homeதொழில்நுட்பம்டெக்னோ கேமான் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | tecno...

டெக்னோ கேமான் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | tecno camon 30 smartphone launched in india price specifications


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ கேமான் 30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்த போனுடன் கேமான் 30 பிரீமியர் போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீன நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. இது 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல்.

இந்நிலையில், டெக்னோ கேமான் 30 சீரிஸ் போன்களை இந்திய சந்தையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் கேமான் 30 மற்றும் கேமான் 30 பிரீமியம் என இரண்டு மாடல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு கேமான் 20 மாடல் போன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டெக்னோ கேமான் 30 சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் எல்டிபிஎஸ் AMOLED டிஸ்பிளே
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் Sony IMX 890 கேமராவை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • மீடியாடெக் டீமான்சிட்டி 7020 சிப்செட்
  • 5,000mAh பேட்டரி
  • 70 வாட்சஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது
  • 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம்களில் இந்த போன் கிடைக்கிறது
  • இரண்டிலும் 256ஜிபி ஸ்டோரேஜ் திறன் உள்ளது
  • இந்த போனின் விலை ரூ.22,999 முதல் தொடங்குகிறது
  • விலையில் அறிமுகச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments