Monday, June 17, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


பொதுப்பலன்: வாகனம் வாங்க, விற்க, புது பணியாட்களை நியமிக்க, செங்கல் சூளை பிரிக்க, கமிஷன் வியாபாரம் தொடங்க, நவக்கிரக வழிபாடு செய்ய, புது மொழி கற்றுக் கொள்ள நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்குள் இருந்து வந்து பனிப்போர் மறையும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.

ரிஷபம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். பழைய வழக்குகள் சாதகமாகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பர். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். புதிய பதவி உண்டு.

மிதுனம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

கடகம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். விருந்தினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். கடினமான செயல்களையும் எளிதாக முடித்து அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

சிம்மம்: எடுத்த வேலையை திறம்பட செய்து முடிப்பீர். அழகு, இளமை கூடும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழிநீங்கி மதிப்பு உயரும். புதிய பதவி கிடைக்கும்.

கன்னி: கணவன் – மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல் வரக்கூடும். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

துலாம்: குழப்பங்கள் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். பொறுப்பு கூடும்.

விருச்சிகம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவார்கள். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். வியாபாரம் சூடு பிடித்து, லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பொறுப்பு கூடும்.

தனுசு: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் நிம்மதி உண்டு. விருந்தினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். புதிய பங்குதாரர்களின் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி இனி பணிவார்.

மகரம்: இதுவரை முடியாமலிருந்த வேலைகள் இன்று முடியும். தந்தையாருடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். சக ஊழியருடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.

கும்பம்: வீண் அலைச்சல், விரயச் செலவுகள் வரக் கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். பொறுப்பு கூடும். எதிலும் நிதானத்துடன் இருக்கவும்.

மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர்கள். பணவரவு ஓரளவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். வீண் விவாதம் தவிர்க்கவும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments