Monday, June 17, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily horoscope


பொதுப்பலன்: அரசு அதிகாரிகளை சந்திக்க, கடன் பைசல் செய்ய, வழக்குகள் பேசி தீர்க்க, வீடு,மனை மற்றும் வாகனம் விற்க, வங்கி கடன் பெற நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவகிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி தீர்ந்து, நிம்மதி பிறக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பான செலவுகள் இருக்கும். பயணங்கள் அலைச்சல் தரும். வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் குழப்பம் வர வாய்ப்புண்டு. தேவையற்ற பேச்சுகள், விவாதங்களைத் தவிர்க்கவும்.

மிதுனம்: பழைய வழக்குகள் சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். அரசால் ஆதாயம் உண்டு. முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். கையில் பணம் புரளும். புதிய பங்குதாரர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகரீதியாக இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சக ஊழியர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பது நல்லது.

சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புதிய வாகனம் வாங்கத் திட்டமிடுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு. கவுரவ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எடுத்த வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரத்தில் குழப்பங்கள் வந்து போகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த மனக் கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன்கோபம் விலகும். யோகா, தியானம் பழகவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அதிரடியாக சில மாற்றங்கள் இருக்கும். சக ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்.

தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள், பாராட்டு கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: மனவலிமையுடன் எதையும் முடித்து காட்டுவீர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வாகனம் செலவு வைக்கும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதிய பங்குதாரருடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். வெளியூரிலிருந்து நற்செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கூட்டுத் தொழில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர். லாபம் கிடைக்கும். உத்தியோகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments