Wednesday, June 12, 2024
No menu items!
Google search engine
Homeகல்விசிஐஎஸ்சிஇ முடிவுகள்: 10-ம் வகுப்பில் 99%, பிளஸ் 2-வில் 98% பேர் தேர்ச்சி | CISCE...

சிஐஎஸ்சிஇ முடிவுகள்: 10-ம் வகுப்பில் 99%, பிளஸ் 2-வில் 98% பேர் தேர்ச்சி | CISCE Results: 99% in Class 10th, 98% in Plus 2


சென்னை: சிஐஎஸ்சிஇ பாடத் திட்ட பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 10-ம் வகுப்பில் 99.47 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பில் 98.19 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் ( சிஐஎஸ்சிஇ ) பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு ( ஐசிஎஸ்இ ) மற்றும் 12-ம் வகுப்பு ( ஐஎஸ்சி ) பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இந்த ஆண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 12 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த 2 தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

ஐசிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 2 லட்சத்து 43,617 மாணவர்கள் எழுதினர். அதில் 2 லட்சத்து 42,328 மாணவர்கள் தேர்ச்சி ( 99.47% ) அடைந்துள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 98.94 சதவீதமாக இருந்தது.அதேபோல, ஐஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வை 99,901 மாணவர்கள் எழுதினர். அதில் 98,088 பேர் தேர்ச்சி ( 98.19% ) பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிலாக்கர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு குறித்த விவரங்களை www.cisce.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments