Wednesday, June 12, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், கிரஹப்பிரவேசம் செய்ய, பதவி ஏற்க, குழந்தையை தத்தெடுக்க, பெயர் சூட்ட, காது குத்த, யோகா, ஜோதிடம் பயில, தங்க ஆபரணம், வாகனம் வாங்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நல்ல நாள்.

சூரிய நமஸ்காரம் செய்வது அதிக நன்மைகளைத் தரும். துர்கை, காளி, மாரியம்மனுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து தீபம் ஏற்றினால் நோய்கள் குணமாகும். சூரிய காயத்ரி, ஆதித்ய ஹ்ருதயம் படித்தால் சோர்வு நீங்கி, உடல் புத்துணர்ச்சி பெறும்.

மேஷம்: புது திட்டங்களை தீட்டுவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாருக்கு இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பூர்வீக சொத்து தொடர்பாக குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும். யோகா, தியானம், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். மேலதிகாரி, சக ஊழியர் களிடம் இணக்கமாகச் செயல்படவும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினையை பேசித் தீர்ப்பீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். புதிய பங்குதாரர்களுடன் இணைந்து, வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பாக்கி வசூலாகும். புதிய கடை திறப்பீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. கவுரவ பதவி உங்களைத் தேடி வரும்.

சிம்மம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வர வாய்ப்பு உண்டு. பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களால் தொல்லைகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது.

கன்னி: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். பொறுப்புகள் கூடும்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.

விருச்சிகம்: வீட்டில் விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர்கள். எடுத்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் இருந்த பனிப்போர் விலகும். விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு சில முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

கும்பம்: எதிர்பார்த்தபடி சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பொறுப்புகள் கூடும்.

மீனம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். வீட்டில் குழப்பங்கள் ஏற்படும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சிக்கல்கள் வரக் கூடும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments