Sunday, April 14, 2024
No menu items!
Google search engine
Homeசினிமாஅல்லு அர்ஜுனை இயக்குகிறார் அட்லீ! | Atlee to direct Allu Arjun

அல்லு அர்ஜுனை இயக்குகிறார் அட்லீ! | Atlee to direct Allu Arjun


இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்குச் சென்றார். பான் இந்தியா படமாக வெளியான இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்தனர். வெற்றி பெற்ற இந்தப் படம் வசூலிலும் சாதித்தது.

இந்தப் படத்தை அடுத்து சில மாதங்கள் ஓய்வெடுப்பதாகக் கூறிய அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கானை ஒரே படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறியிருந்தார். அவர் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் இப்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு அடுத்த வருடம் அக்டோபர் மாதம் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments