Tuesday, April 16, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily horoscope


மேஷம்: கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன் யோன்யம் அதிகரிக்கும். தள்ளுபடி விற்பனையில் வாகனம் வாங்குவீர்கள். புது டிசைனில் ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்: தேவையற்ற அச்சம், கனவுத் தொல்லைகள் வந்து நீங்கும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள். முன்கோபத்தால் நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள்.

மிதுனம்: எதிர்மறை எண்ணத்துக்கு இடம்தராமல் நம்பிக்கை யுடன் செயல்படுங்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவு வந்து நீங்கும்.

கடகம்: பல வகையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள், ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு கூடும். பயணம் இனிதாக இருக்கும்.

சிம்மம்: உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தீராத பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி உண்டாகும்.

கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும். எதிர்பாராத தொகை கைக்கு வரும். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.

துலாம்: வாகன வகையில் தேவையற்ற செலவு ஏற்படும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் வந்து நீங்கும். அவர்களது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். எதிலும் பொறுமை தேவை.

விருச்சிகம்: இழுபறியாக இருந்த கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். உறவினர்கள் உங்கள் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

தனுசு: அக்கம் பக்கத்தினருடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். சகோதர உறவுகள் இடையே மனம்விட்டு பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பழுதான வாகனம் சரியாகும். தைரியமாக, தன்னிச்சையாக செயல் பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

கும்பம்: தேவையற்ற கவலை, மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, கடையை விரிவுபடுத்தி கட்டும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்: ஆடை, அணிகலன்கள் சேரும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். திடீர் பண வரவு, பொருள் வரவு உண்டாகும்.

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments